புனித ரமலான் பண்டிகை கோவையில் இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்!!

புனித ரமலான் பண்டிகை கோவையில்   இஸ்லாமியர்கள்  உற்சாகமாக கொண்டாட்டம் -உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள  இஷ்ரதுல் முஸ்லிமீன் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு  தொழுகைக்கு பிறகு  ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள்  ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருந்து, பின்னர் ஷவ்வால் 1 ந்தேதி   ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.. இந்நிலையில் இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி இன்று வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்த நிலையில், அதன்படி, இன்று  அதிகாலையில் கோவையில் பல்வேறு இடங்களில்  நடைபெற்ற சிறப்பு தொழுகையில்  இஸ்லாமியர்கள்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதன் ஒரு பகுதியாக  கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள இஷ்ரதுல் முஸ்லிமீன் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் குவ்வத்துல் இஸ்லாம் அரபி மதரஸா பள்ளி வளாகத்தில்  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்  தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments