கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது!!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில் கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்கள் 

ஒரு மாதம் காலமாக நோன்பு வைத்து நல்ல பண்புகளை வளர்த்து அதை மீதியுள்ள மாதங்களை கடைபிடிக்க ரமலான் ஆகும் அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகிறார்கள் 

இதில் தலைவர் ஆசிரியர் அமானுல்லா,  பேராசிரியர் செயலாளர் பீர் முகமது, முத்துவல்லி ஜாஃபர் அலி, பொருளாளர் பக்கீர் முகமது, துணைத் தலைவர்கள் சையது உசேன், சாகுல் ஹமீத்,செயற்குழு உறுப்பினர்கள் ஆசிக்அஹமது, முகமது ஷபிக், முகமது யூசுப், ஷாஜகான், இதயத்துல்லா,முகமது இப்ராஹிம், நவ்ஷாத் அலி, காஜா உசேன், நிஜாமுதீன்,தலைமை இமாம் இப்ராகிம் பாகவி, மற்றும் மகாசபையாளர்கள், முன்னாள் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டார்கள் 

தொழுகை வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments