விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!


பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று காலை 11 மணி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். அதேபோல், விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும்,தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெற ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாளின் நகலை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.nic.in  என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments