முத்தூஸ் மருத்துவமனை குழுமத்தின் உயிர் காக்கும் ஏசிடி அக்யூட் கேர் டீம் திட்டம் துவக்கம்!! போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்!!

கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை குழுமம் சார்பில் அவசர சிகிச்சை முக்கியத்துவத்தை  பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்று கிழமை வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து நேற்று மாலை கோவை சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனை முன்பு ஏசிடி என்ற அக்யூட் கேர் டீம் அவசர சிகிச்சை திட்ட துவக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு டாக்டர்  முத்தூஸ் மருத்துவமனை  சேர்மன்  டாக்டர் முத்து சரவணகுமார் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரேமா, இணை இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏசிடி அவசர சிகிச்சை திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக மாரடைப்பு ஏற்பட்டால் ஒருவரை எப்படி காப்பாற்றுவது,  விபத்து ஏற்பட்டால் அவரை எப்படி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, அதில் ஏசிடி குழுவினர் எப்படி செயல்படுவார்கள் என தத்ரூபமாக  செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசும்போது கோவை மாநகரில் முதன்முறையாக ஏசிடி அக்யூட் கேர் டீம்  என்ற பெயரில் அவசர சிகிச்சை திட்டத்தை நேரடியாக சென்று வழங்க முத்தூஸ் மருத்துவமனை சார்பில் துவக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. 

லண்டனில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்லும் போது போக்குவரத்து காவலர்கள்  ஆம்புலன்ஸுக்கு எப்படி வழிவிடுவது போல ஏற்பாடு செய்கிறார்களோ அதே போல மருத்துவர்களுக்கும் செய்து கொடுக்கிறார்கள். 

அது போன்றதொரு திட்டத்தை செயல்படுத்த காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். விழாவில்  டாக்டர் முத்து சரவணகுமார் பேசும் போது மாரடைப்பு, விபத்து, வலிப்பு பாம்பு கடித்தல் இயற்கை பேரிடர் உள்ளிட்ட சூழல்களில் கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட நேரத்தில் ஆக்ட் குழுவினர் உடனடியாக அங்கு சென்று அந்த இடத்திலேயே அவர்கள் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்க தேவையான அனைத்து வசதிகளையும் செய்வார்கள். 

இதன் மூலம் உயிரிழப்பு என்பது முழுமையாக தவிர்க்கப்பட கூடும்  என்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக சேவையில் ஆர்வம் உள்ள தன்னார்வலர்களுக்கு பிஎல்எஸ் என்ற பேசிக் லைஃப் சப்போர்ட்  எனப்படும் அடிப்படை உயிர்  காக்கும் சிகிச்சைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் காவல் துறையை சேர்ந்த  காவலர்களும் கலந்து கொண்டனர் . 

தொடர்ந்து ஏசி டி   மருத்துவ  குழுவினரான டாக்டர் இனியவன், டாக்டர் செந்தில் பிரகாஷ், டாக்டர் சாஜிதா , டாக்டர் சத்தியமூர்த்தி, டாக்டர் சுசிந்த்  கண்ணா , டாக்டர் ஞான சண்முகம் டாக்டர் இனியவன் ஆகியோருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெகுமதி  வழங்கினார். இதில் டாக்டர் முத்தூஸ்  மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments