யோகா தினத்தை முன்னிட்டு யோவா யோகா அகாடமி சார்பில் தேசிய அளவிலான ஓபன் யோகா சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடைபெற்றது!!

யோவா யோகா அகாடமி, டெக்த்லான் ஆகியோர் இணைந்து 10வது இன்டர்நேஷனல் யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான ஓபன் யோகா சாம்பியன்ஷிப் போட்டி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள டெக்த்லான் வளாகத்தில் நடைபெற்றது.கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த யோவா யோகா பயிற்சி பள்ளியின் ஆசிரியர் வைஷ்ணவி முன்னிலையில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம்,கேரளா கர்நாடகா உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நடைபெற்ற இந்த போட்டியில், பெண்கள் பிரிவில்,சக்தி சஞ்சனா முதல் இடம் பிடித்து சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றார்.இரண்டாம் இடத்தை,பாவியா ஸ்ரீ,மூன்றாம் இடத்தை சோபிகா ஆகியோர் பிடித்தனர்.ஆண்கள் பிரிவில்,முதல் இடத்தை விக்னேஷ் பிடித்து சாம்பியன் ஆப் சாம்பியன் வென்றார் இரண்டாம் இடத்தை ஹரீஷ்,மூன்றாம் இடத்தை ஹேமந்த் ஆகியோர் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments