வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், விடுதலைப் போராட்டத் தியாகி, தமிழறிஞர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா மற்றும் "SWADESHI STEAM" நூல் அறிமுக விழா வருகிற 5ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவிற்கு வ.உ.சி. பிறந்தநாள் விழாக்குழு தலைவர் பொன் வெங்கடேஷ் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் பே. சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். பியர்ல் ஷிப்பிங் ஏஜென்சீஸ் எட்வின் சாமுவேல் முன்னிலை வகிக்கிறார். வ.உ.சி. கல்விக்கழகம் செயலர், ஏபிசிவி சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார். ஏபிசி வீரபாகு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் (ஓய்வு) மதி வேலாயுதம் நூல் அறிமுகம் செய்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை ஆற்றுகிறார். நூலாசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதி (பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்) ஏற்புரை வழங்குகிறார். வ.உ.சி. பிறந்தநாள் விழாக்குழு செயலாளர் ஆ.செந்தில் ஆறுமுகம் நன்றியுரை வழங்குகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments