2024ம் ஆண்டுக்கான விஷ்ணு புரம் விருது!!
கோவையை மையமாக கொண்டு விஷணுபுரம் இலக்கிய வட்டம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டு தோறும் இலக்கிய ஆளுமைகளை பெருமை படுத்தும் வகையில் விஷ்ணுபுரம் எனும் விருதை வழங்கி வருகிறது. 2010ம் ஆண்டு முதல் துவங்கபட்ட இந்த அமைப்பு தொடர்ந்து ஆண்டு தோறும் சிறந்த எழுத்தாளுமைகளின் படைப்புகளை தேர்வு செய்து அவர்களுக்கு விஷ்ணு புரம் எனும் விருதை, வழங்கி பெருமை படுத்தி வருகின்றது.
15 ம் ஆண்டின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது, எழுத்தாளர் இரா.முருகனுக்கு இன்று வழங்கபட்டது. கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட எழுத்தாளர் விகேக் மற்றும் எழுத்தாளர்கள் ஜெயமோகன், கோபாலகிருஷ்ணன், ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்று இரா. முருகன் இதுவரை எழுதிய எழுத்துக்கள் மற்றும் அவரது புத்தகங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து எழுத்தாளர் இரா. முருகன் எழுதிய முப்பட்டை கண்ணாடியின் உலகம் எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நவீன தமிழ் இலக்கியத்திற்க்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளை பெருமை சேர்க்கும் வகையில், அரசூர் வம்சம் என்ற பெரு நாவலை தொடர் வழியாக தமிழ் இலக்கியத்தில் எழுதி சாதனை படைத்து, பல்வேறு வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தமைக்காக எழுத்தாளர் இரா. முருகனுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கபட்டது.
விருதுகளுடன் விஷணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக 5 லட்ச ரூபாய் பணமுடிப்பும் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் விஷ்ணுபுரம் விருதுகளை பெற்ற எழுத்தாளர்கள், மாதவன், பூமணி, தேவதேவன், முத்துசாமி, ராஜ் கெளதமன், அபி, சுரேஷ் குமார், இந்திரஜித், விக்ரமாதித்தன், சாரு நிவேதிதா, யுவன் சந்திர சேகர், மற்றும் வாசகர்கள், புத்தக பிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments