ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அடுத்த தலைமுறை தொழில் நுட்பமாக ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என மாற்றப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேருந்து போக்குவரத்து நிறுவனமாக 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏபிடி,நிறுவனம் 1964-ஆம் ஆண்டு ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனமாக தொடங்கப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பரந்து விரிந்து தனது சேவையை செய்து வரும் ஏபிடி நிறுவனமானது எட்டு மாநிலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்த போக்குவரத்து நிறுவனமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஏ.பி.டி.நிறுவனம் அனைத்து சேவைகளையும் வழங்கும் விதமாக ஏ.பி.டி.லாஜிஸ்டிக்ஸ் என தனது சேவையை நவீன மயமாக்கி உள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.பி.டி.நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் ஏ.பி.டி.நிறுவனமானது சிறப்பான நற்பெயருடனும், நம்பிக்கையுடனும் பெரிய நிறுவன வாடிக்கையாளர்களான FMCG PHARMAஇரசாயனப் பொருட்கள், விவசாய பொருட்கள், மின்னணுவியல் போன்ற பல்துறைகளின் சேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
மேம்பட்ட ஆற்றல் யுக்தியுடன் ஏபிடி பார்சல் சர்வீஸ் எனும் பெயர் ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என்று மறுமலர்ச்சி பெறுகிறது. இந்த புதிய பெயரிடுதலின் மூலம் ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் தனது எல்லையை இந்தியா முழுமைக்கும் விரிவாக்கம் செய்வதோடு அதிநவீன லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்குவதில் தொடர் அர்ப்பணிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கிறது.
தொடர்ந்து பேசிய ஏபிடி லாஜிஸ்டிக்ஸின் நிர்வாக இயக்குனரான ஹரி ஹர சுதன் இந்த மறுபெயரிடல் என்பது ஒரு புதிய பெயரைப் பற்றியது மட்டுமல்ல, இது நிறுவனத்தின் வளர்ச்சியின் பிரதிபலிப்புடன் வாடிக்கையாளரின் அனுபவத்தையும், தெரிவு நிலையையும் உருவாக்கி விரைவில் கிடங்கு மற்றும் சரக்கு மேலாண்மை போன்ற சேவைகளின் வரம்பையும் விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.
ஏபிடி லாஜிஸ்டிக்ஸ்,லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் துறையில் ஒரு ஆதிக்க சக்தியாக மாற உறுதிபூண்டு தனது சேவையை விரிவாக்கி உள்ளது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments