ஆட்சியாளரும், சட்டமும் அடித்தட்டு மக்களை பாதுகாப்பதற்குரியது சி ஐ டி யு கோரிக்கை!!


கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள அரசுக்கு சொந்தமான சின்கோனா தேயிலை தோட்ட நிறுவனம் சுமார் 50 ஆண்டுக்கு முன்பாக இலங்கையில் வந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசால் துவங்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. கடந்த சுமார் 20 ஆண்டுகளிலிருந்து சரியான முறையில் தேயிலை செடிகளே பராமரிப்பது,மருந்து அடிப்பது ,தேயிலை இலையை அதிகம் எடுப்பதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்கும் எந்த வேலைகளும் செய்யவில்லை, தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும்  செய்யவில்லை புதிய தற்காலிக தொழிலாளர்கள் வேலைக்கும் எடுப்பதில்லை வேலை செய்தவர்களையும்   நிரந்தரம் செய்யவில்லை போன்ற பல வேறு காரணங்களால் இந்நிறுவனம் நலிவு அடைந்துள்ளது.  வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் அரசு தேயிலைத் தோட்ட நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும். முதலில் சின்னக்கல்லார் எஸ்டேட்டில் தொழிலாளர்களே அருகில் உள்ள எஸ்டேட்டுக்கு மாற்றுவதாகவும் அரசு தோட்டத் நிறுவனம் மூலம் எந்த அறிவிப்பும் திருவிக்காத நிலையில் தொழிலாளர்கள் நான்கு மூன்று தலைமுறையாக தனது வாழ்வாதாரத்தை ஒரே இடத்தில் வாழ்ந்து வேறு இடத்திற்கு மாற்றுவதால் வேதனைப்படுகிறார்கள். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர் கூறுகளில் அரசு நிறுவன மூலம் எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வழங்கவில்லை ஆனால் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது. பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழ்ந்து தற்பொழுது வேறு பகுதிக்கு செல்வது மிகவும் வேதனையாக உள்ளது.வருத்தமாக உள்ளது நாங்கள் வேற இடத்திற்கு போக மாட்டோம் என்று உறுதியாக கூறினர்.  இது தொடர்பாக சி ஐ டி யூ சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில் சட்டம் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உரியது,அரசும், ஆட்சியாளரும் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தான் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இப்பகுதியில் இருந்து மாற்றுப் பகுதிக்கு அனுப்புவது தவறு இனிமேல் இப்பகுதிக்கு பேருந்து வசதி, மின்சார வசதி கிடையாது, தபால் நிலையமும் இங்கு கிடையாது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகிறது. 

இதற்கு  தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது திராவிட மாடல் அரசு என்று கூறும் தமிழக அரசு இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தேயிலைத் தோட்ட நிறுவனம் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும். இதை கருத்தில் கொண்டு இலங்கையில் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் முகாமில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க  வால்பாறை பகுதியில் உள்ள சிங்கோனா அரசு தேயிலைத் தோட்ட நிறுவனத்தில் வேலையில் அமர்த்தி அடிப்படை வசதிகள் குடியிருப்பு வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும். அரசு தேயிலைத் தோட்ட நிறுவனம் வளர்ச்சி அடையும் இதனால் தமிழக அரசுக்கும் நிதி அதிகம் கிடைக்கும். இதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு  அரசையும் மக்கள் நலனையும் பாதுகாக்கிற உயர் அதிகாரிகளே தேயிலை தோட்ட நிறுவனத்திற்கு பொறுப்பேற்று நடத்த பரிந்துரை செய்யுமாறும் இப்பகுதி மக்களின் சார்பாகவும் சி ஐ டி யூ சங்கத்தின் சார்பாகவும் கேட்டுக்கொண்டனர்.

- P.பரமசிவம்.

Comments