கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்!!
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கிராப்ட் பஜார் 2025 பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் (ஜூலை 17) முதல் ஜூலை 22 வரை 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கடந்த 1988-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது.
தமிழகத்தின் மாநிலம் மற்றும் நாட்டின் கைவினை மரபுகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு சார்பில் வடிவமைப்பு மேம்பாடு, பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் கைவினை கலைஞர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் கலந்துகொள்ளும் "கிராப்ட் பஜார் 2025" ஒவ்வொரு ஆண்டும் கோவையில் நடைபெறுகிறது. இதில் கலை, கைவினை மற்றும் ஜவுளி வகை பொருள்கள் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் நேரடியாக கைவினை கலைஞர்களிடமிருந்து வாங்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது.
"நம்பிக்கை" என்ற திட்டம் 2023-ம் ஆண்டு கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மூலம் தொடங்கப்பட்டது. இதில் கைவினை கலைஞர்களுக்கு பயணம், தங்குமிடம் மற்றும் கண்காட்சி பங்கேற்புக்கான ஆதரவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை குழுக்கள் பங்கேற்ற்றுள்ளன.
-சீனி, போத்தனூர்.
Comments