பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு லோகோ வெளியீடு!!
பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் பி.எஸ்.ஜி.யின் நூற்றாண்டு சேவையையும் சிறப்பம்சத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர்
திரு ஜி. ஆர். கார்த்திகேயன் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர்
டாக்டர் கே. பிரகாசன் வரவேற்புரையாற்றினார்.
பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் டி. எம். சுப்பா ராவ், நிர்வாக அறங்காவலர்
திரு எல். கோபாலகிருஷ்ணனை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.
விழாவின் ஒரு பகுதியாக, பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் வரலாறு மற்றும் கடந்த கால சாதனைகளைப் பிரதிபலிக்கும் ஆடியோ-விசுவல் விளக்கக்காட்சிகள் இடம் பெற்றன.
விழாவின் முக்கிய அம்சமாக, நூற்றாண்டு மற்றும் பிளாட்டினம் ஜூபிலி லோகோக்களை டி.ஆர்.டி.ஓ.வின் முன்னாள் விஞ்ஞானியும், புனே டி.ஐ.ஏ.டி.யின் முன்னாள் துணைவேந்தருமான பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் பிரஹ்லாதா ராமாராவ் வெளியிட்டார்.
லோகோ வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற என்.ஐ.டி. அகமதாபாத்தைச் சேர்ந்த நல்லாப்பு சண்முகி மற்றும் டி.எல்.வி.எஸ். மூர்த்தி ஆகியோருக்கு, அவர்களின் படைப்பாற்றல் பங்களிப்புகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்கள், புதிய லோகோக்களின் வடிவமைப்பு குறித்து விரிவாக விளக்கி, அவற்றின் குறியீட்டு கூறுகள் பி.எஸ்.ஜி.யின் பாரம்பரியம் மற்றும் நோக்கங்களுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என்பதையும் விவரித்தனர்.
விழாவில், ஐ.ஐ.டி. குவஹாத்தியின் பேராசிரியர் டாக்டர் உதயகுமார் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு வி. கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் டாக்டர் கே. சுரேஷ் குமார் நன்றியுரை ஆற்றினார்.
-சீனி, போத்தனூர்.
Comments