டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி! - ஒருவர் உயிரிழப்பு, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் பகுதியில் அப்பர் ஆழியார் நவமலை பகுதியிலிருந்து ஆழியார் பகுதிக்கு வேலைக்கு வரும் பொதுமக்கள் அங்கிருந்து அசோக் லேலண்ட் மினி லாரியில் ஆட்களை ஏற்றி ஆழியாருக்கு வந்து கொண்டிருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பாறையில் மோதியது. வாகனத்தில் வேலைக்காக வந்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஒரு பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வாகனத்தில் வந்த பயனாளிகளை 108 வாகனங்களை வரவழைத்து அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சாலையில் மிகுந்த நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சம்பவ இடத்தில் ஆழியார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை அபாரதம் விதித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கூறி  வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் - திவ்யக்குமார்.

Comments