ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அது குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சிறிய படங்களை பெரிய அளவில் பாதிக்கும்!!
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் ராஜு ஜெயமோகன், பவ்யா த்ரிகா பாதையா பிரசாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் கோவை பிராட்வே சினிமாஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்..
அப்போது பேசிய படத்தின் இயக்குனர் ராகவ் மிர்தாத்,மற்றும் நடிகர் ராஜு ஜெயமோகன், மைக்கேல் ஆகியோர் பேசுகையில்;
பன் பட்டர் ஜாம் திரைப்படம் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெண்கள் அதிகமானோருக்கு பிடித்துள்ளது குடும்பமாக பலரும் வந்து திரைப்படத்தை கண்டு செல்கிறார்கள் என தெரிவித்தனர்.
ஒரே நாளில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகும் பொழுது எத்தனை திரைகள் என்று முடிவு எடுப்பது நடிகர்கள் , இயக்குனர்கள் கையில் இல்லை அது இயற்கையாக எவ்வாறு நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என தெரிவித்தார்.
தம்மை பலருக்கும் அடையாளம் காட்டியது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் என்றும் கூறிய நடிகர் ராஜூ ஒரு திரைப்படத்தில் பாசிடிவ் நெகட்டிவ் இரண்டையும் கூறுவது தான் ஒரு விமர்சனமாக இருக்கும் அதைத் தவிர்த்து கிண்டல் செய்வது தவறு என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா திரைப்படம் ரிலீஸ் தற்பொழுது செய்யப்பட்டுள்ளதை பார்க்கும்பொழுது சற்று பயமாக இருந்தது ஆனால் நம்முடைய படம் ஓடும்பொழுது அருகில் தலைவர் படமும் ஓடுகிறது என்பது ஒரு பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் விக்ராந்த் நடித்துள்ளார் திடீரென அவரை பார்க்கும்பொழுது அதற்கான வரவேற்பும் நன்றாக உள்ளது. இந்தப் படத்தின் பெயரை வைப்பதற்கு சிறுவயதில் சாப்பிட்ட ஏதேனும் ஒரு உணவு மிகவும் பிடித்திருக்கும் எனவே எதார்த்தமாகத்தான் இந்த பெயர் அமையப்பெற்றது என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அந்த திரைப்படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் பொழுது சிறிய படங்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய இயக்குனர் ராகவ்,
இது போன்ற சின்ன படங்களை பெரிய படங்கள் ஆக்க வேண்டியது ரசிகர்களின் பொறுப்பு எனவும் அனைவரும் குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து பாருங்கள் என பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments