கோவில்பட்டியில் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்!!

ஆடி மாதம் வந்தாலே, அம்மன் கோவில்களில் திருவிழா, கூழ் வார்க்கும் நிகழ்வு, உற்சவங்கள், நடைபெறும். அதே போல, ஆடி பதினெட்டு, தாலி பிரித்து கோர்க்கும் பண்டிகை போன்றவையும் உள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு, ஆடி மாதம் வரும் அமாவாசை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எல்லா மாதங்களிலும் அமாவாசை வரும். அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். ஆனால், ஆண்டு முழுவதும் திதி கொடுக்க முடியவில்லை அல்லது இறந்தவர்களுக்கு முறையான தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாதம் செய்தால், ஓராண்டுக்கான திதி கொடுத்த பலன் கிடைக்கும்.

நம்மடைய முன்னோர்கள் என்று சொல்லப்படும் பித்ருக்கள், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை பூமியில் இருப்பார்கள். இதனால் தான் ஆடி மாதம் வரும் அமாவாசை அன்று பித்ரு காரியங்களை முறையாக செய்ய வேண்டும்.

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவசை, ஆடி அமாவாசை ஆகும். மகாவிஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் தூங்கச் செல்லும் இந்த காலத்தில் தங்களின் சந்ததியினரை காத்து, ஆசிகள் வழங்கி, நன்மைகள் பலவற்றை வழங்குவதற்காக பித்ருக்கள் பித்ருலோகத்தில் இருந்து ஆடி அமாவாசை தினத்தில் பூமிக்கு வருவதாக ஐதீகம். அதனால் தான் ஆடி மாதத்தில் இறை வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இன்று ஆடி அமாவாசையில் கோவில்பட்டி தெப்பக்குளம் பிள்ளையார் கோவில் பின்புறம் அதிகாலை முதல் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Comments