கோவில்பட்டியில் தேவர் குருபூஜை விழா! - Dr.S.குருராஜ் மரியாதை!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா, அக்டோபர் 30, நேற்று நடைபெற்றது. திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் Dr.S.குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் செய்தியாளர்களிடம் Dr.S.குருராஜ் கூறுகையில், விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடைபெற்று வருகிறது.

2007 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புனரமைக்கப்பட்டு நூற்றாண்டு தோரணவாயில் அமைக்கப்பட்டு, புகைப்பட கண்காட்சிக்கூடம், அணையா விளக்கு, புதிய நூலகக்கட்டடம்,முளைப்பாரி மண்டபம், முடிக் காணிக்கை மண்டபம் அமைக்கபட்டன.

மேலும், கயத்தார் அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நிகழ்ச்சியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்து, அங்கு அமைந்துள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவினை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், பால்குடம், ஜோதி மற்றும் முளைப்பாரி எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு திமுக மத்திய ஒன்றிய செயலாளர்  கருப்பசாமி தலைமை வகித்தார். கயத்தாறு பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகலாபுரம் வெயில்முத்து பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வெயில்முத்து, மத்திய ஒன்றிய கழகத் துணைச்செயலாளர் எட்டுராஜ், இளைஞர் அணி கருணாநிதி, ராஜா புதுக்குடியைச் சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார், வடக்கு இலந்தைகுளம் ஊர் நாட்டாமை, இளைஞர் அணியினர் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர் 

- ராஜ்குமார்.

Comments