கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்! - கோவை நவ இந்தியா எஸ் என் ஆர் கலையரங்கத்தில் துவங்கியது.
கோவை: மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்புச் சூழலில் மாணவர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது என கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநர் கருணாகரன் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் கோவை நவ இந்தியா எஸ் என் ஆர் கலையரங்கத்தில் துவங்கியது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநர் எம். கருணாகரன் பேசுகையில்;
மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்புச் சூழலில் மாணவர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி எதிர்காலத்தில் சுமார் 1.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அதே நேரத்தில் 90 லட்சம் வேலைகள் முற்றிலும் மாறும் மேலும் 50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி மறைந்து போகும் எனவும் வங்கிப் பணிகள்,கற்பித்தல் உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறைகளுக்கு மாறிவிட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments