மாணவிகள் எதைக் கண்டும் பயம் கொள்ளக் கூடாது! - சுப்ரியா சாஹு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஜி.ஆர்.ஜி அறக்கட்டளை ஆண்டு நிறுவனர்கள் தினம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பேசியாதவது:
தமிழகத்தில் எங்களிடம் அழகான சதுப்பு நிலங்கள் உள்ளன. கடந்த 2005-ஆம் ஆண்டில் புதிய சதுப்பு நிலங்களை உருவாக்கி உள்ளோம். புதிய காடுகளுக்குப் புத்துயிர் அளித்து இருக்கிறோம். மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் புதிய பகுதிகளை காப்புக்காடுகளாக அறிவித்தோம். அந்தக் காடுகள் உங்களுக்கும், வரவிருக்கும் தலைமுறைக்கும் சொந்தமானவை. காடுகளை நீங்கள் இன்று பாதுகாக்கவில்லை என்றால், நாளை அவை இருக்காது. அழிந்து வரும் உயிரினங்கள் புத்துயிர் பெறுவதற்காகவும், அவற்றை மீட்டெடுப்பதற்காகவும் தமிழக அரசு ரூ. 50 கோடி ஒதுக்கி உள்ளது. மன்னார் வளைகுடாவில் கரியாச்சல்லி தீவு உள்ளது. இந்தத் தீவு 20 ஆண்டுகளுக்கு முன்பு 5 மடங்கு பெரியதாக இருந்தது. ஆனால், தற்போது காலநிலை மாற்றம் காரணமாக இந்தத் தீவு மூழ்கி வருகிறது.
நீங்கள் இந்தத் தீவைப் பாதுகாக்கவில்லை என்றால், விரைவில் அழிந்துவிடும். மண்ணைப் பாதுகாக்க தீவுகள் மிகவும் முக்கியமானவை, இந்தத் தீவை மீட்டெடுப்பதற்காக எங்களிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. இந்த தீவை மீட்டெடுக்க உலக வங்கியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கி உள்ளோம். நிச்சயமாக அடுத்ததை மீட்டு கொண்டு வருவோம். மாணவிகளுக்கு எந்தக் கனவும் சாத்தியமற்றது அல்ல. கனவை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நன்றாகப் படியுங்கள், மாணவிகளாகிய நீங்கள் உடல் ஆரோக்கியத்திலும், மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், வாழ்க்கையி உங்களால் எதையும் செய்ய முடியாது. உடல் ரீதியாக மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். எதற்கும் பயப்பட வேண்டாம். அநீதி நடப்பதாக உணர்ந்தால், நீங்கள் அமைதியாக இருக்காதீர்கள், உங்கள் குரலை உயர்த்துங்கள். அநீதியை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதீர்கள் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments